அஞ்சலக விதிகளில் அதிரடி மாற்றம்.. இனி பான் (PAN) எண் கட்டாயம்!

 
பான் பான்

மத்திய அஞ்சல் துறை தனது சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறைகள் குறித்த தெரிஞ்சுக்கோங்க. 

அஞ்சல் அலுவலகத் திட்டங்களில் முதலீடு செய்யவும் அல்லது சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுக்கவும் இனி பான் (PAN) அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உங்களிடம் பான் அட்டை இல்லையென்றால், அதற்குப் பதிலாக 'படிவம் 97' (Form 97) சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

இதுவரை வரிப் பிடித்தத்தைத் தவிர்ப்பதற்காக மூத்த குடிமக்கள் மற்றும் பிற முதலீட்டாளர்கள் பயன்படுத்தி வந்த 15G மற்றும் 15H படிவங்கள் இனி செல்லாது. அவற்றுக்குப் பதிலாக 'படிவம் 121' (Form 121) மட்டுமே இனி நடைமுறையில் இருக்கும்.

ஒரு நிதியாண்டில் தங்களின் மொத்த வருமானம் 'பூஜ்ஜியம்' (Zero Taxable Income) என உள்ளவர்கள் மட்டுமே இந்த 'படிவம் 121'-ஐச் சமர்ப்பித்து வரிச் சலுகை பெற முடியும். இந்த படிவத்தை ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் சமர்ப்பிப்பது அவசியம்.

அஞ்சலகம்

அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு அல்லது வைப்பு நிதி (FD) வைத்திருப்பவர்கள் இந்த புதிய மாற்றங்களைக் கவனித்து, அதற்கேற்ப தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பிப்பது பணப் பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க உதவும்.