இன்று ஏப்.1 முதல் திட்டத்தில் மாற்றம்... கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.14,000 ரொக்கம்... ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம்!

 
கர்ப்பிணி

இன்று முதல் தமிழகத்தில் கர்ப்பிணி பெண்கள் ரூ.14,000 நிதியுதவி பெறுவது எப்படி? நிதியுதவி பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க. தமிழகத்தில், டாக்டர்முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுநிதியுதவி திட்டம் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் பதிவு செய்யவேண்டும். இந்த பதிவினை ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் உங்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை கொடுத்து இதற்கான பிக்மி எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும். இதனையடுத்து கர்ப்பிணிகளின் வங்கிக் கணக்கில் ரூ2000 வரவு வைக்கப்படும். 4வது மாதத்தில் 2வது தவணையாக ரூ2000 வழங்கப்படும்.  உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரிட்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2000 மதிப்பிலான பெட்டகம்  வழங்கப்படும்.  

கர்ப்பிணி
அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பிறகு 3வது தவணையாக ரூ4000ம், குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4வது தவணையாக ரூ.4000, குழந்தைக்கு 9வது மாதம் முடிந்தவுடன் 5வது தவணையாக ரூ. 2000 என மொத்தம் ரூ.14000 ரொக்கம் மற்றும் ரூ.4000 மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18000 மதிப்பிலான உதவிகள் வழங்கப்படுகின்றன.

பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.11,702 கோடி நிதி 1.14கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. பிரதமரின்  மாத்ருவந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த திட்டத்தில் சில  மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

இந்த நிதிஉதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்படும். அதன்படி ரூ6,000 கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்ததும் 4 வது மாதத்தில் ரூ6,000 மற்றும் 9 வது மாதத்தில் ரூ2,000 ம்  வழங்கப்பட இருக்கிறது.அத்துடன் 3 வது மற்றும் 6 வது மாதத்தில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும். இந்த நடைமுறை இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web