சப்பாத்தி கட்டையால் கொழுந்தனை அடித்தே கொலை செய்த அண்ணி!

 
கன்னியாகுமரி

 

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சொத்து பிரச்சினை மற்றும் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாலகிருஷ்ணன் (66) என்பவரை அவரது அண்ணி பொன்னாம்மாள் சப்பாத்திக் கட்டையால் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆம்புலன்ஸ்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டுத் தலைமறைவாக உள்ள பொன்னாம்மாளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சொத்துத் தகராறுகள் மற்றும் முன்விரோதம் காரணமாக நடக்கும் இது போன்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.