”மகனின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்... ” பாரதிராஜா இரங்கல் !!

தமிழ் சினிமாவின் முண்ணனி இயக்குனர்களில் ஒருவர் சேரன். இவரது படங்களுக்கென்றே தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. இவரின் தந்தை பாண்டியன் இன்று அதிகாலை சொந்த ஊரான மதுரை மாவட்டத்திலுள்ள பழையூர் பட்டியில் உயிரிழந்தார். இவருக்கு வயது 84. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் சினிமா ஆப்ரேட்டராக பணிபுரிந்தவர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயக்குநர் சேரன் பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டபோது தமிழகம் முழுவதும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னையைப் போற்றி
— Bharathiraja (@offBharathiraja) November 16, 2023
ஆயிரம் திரைப்படங்கள்
நம்மை தாலாட்டிச் சென்றாலும்
தவமாய் தவமிருந்து என்கிற ஒரு காவியத்தை
படைத்து தந்தையர்களுக்கும்
தமிழனுக்கும்
பெருமைச் சேர்த்த
மகா கலைஞன் திரு.சேரன்
தன் தந்தையை இழந்து
வாடுவது மிகுந்த வேதனை
அளிக்கிறது. மகன் சேரனின்
துயரத்தில் நானும் பங்கு… pic.twitter.com/kBMnQvNkVc
அன்னையைப் போற்றி
— Bharathiraja (@offBharathiraja) November 16, 2023
ஆயிரம் திரைப்படங்கள்
நம்மை தாலாட்டிச் சென்றாலும்
தவமாய் தவமிருந்து என்கிற ஒரு காவியத்தை
படைத்து தந்தையர்களுக்கும்
தமிழனுக்கும்
பெருமைச் சேர்த்த
மகா கலைஞன் திரு.சேரன்
தன் தந்தையை இழந்து
வாடுவது மிகுந்த வேதனை
அளிக்கிறது. மகன் சேரனின்
துயரத்தில் நானும் பங்கு… pic.twitter.com/kBMnQvNkVc
இயக்குநர் சேரனின் தந்தையின் இறுதி சடங்குகள் சொந்த ஊரான பழையூர் பட்டியில் இன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேரனின் தந்தை மறைவை அடுத்து சினிமா பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் பலரும் ஆறுதல்களும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா இயக்குநர் சேரனின் தந்தை மறைவுக்கு இரங்கல் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
அன்னையைப் போற்றி ஆயிரம் திரைப்படங்கள் தமிழில் நம்மை தாலாட்டிச் சென்றாலும் தவமாய் தவமிருந்து என்கிற ஒரு காவியத்தை படைத்து தந்தையர்களுக்கும் தமிழனுக்கும் பெருமைச் சேர்த்த மகா கலைஞன் திரு.சேரன் தன் தந்தையை இழந்து வாடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மகன் சேரனின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!