இன்று முதல் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி!!

 
சதுரகிரி

ஆடி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டுக்காக நேற்று ஜூலை 30  முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்யலாம் என வனத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சாத்தூர் வனசரகம் ஐந்தாவது பீட்டில் சதுரகிரி மலையை ஓட்டியுள்ள ஊஞ்சல் வனப்பகுதியில் காட்டுத்தீ  ஏற்பட்டது .  இதன் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலை ஏற தடை விதிக்கப்பட்டு இருந்தது.

சதுரகிரி
 நேற்று மாலை காட்டுத்தீ  முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பின் அணைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 3  நாட்களுக்கு சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என வனத்துறை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக   ஜூலை 15ம் தேதி சதுரகிரி மலையில் காட்டுத்தீ  பரவியதால் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சதுரகிரி

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில்  எல்லா நாட்களும் மலையேறி சாமிதரிசனம் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன் திடீரென இப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டதில் பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர். இதனையடுத்து தற்போது அமாவாசை பௌர்ணமி, பிரதோஷ நாட்களில் மட்டும் மலையேற அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web