இன்று முதல் அக்.20 வரை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - செக் பண்ணிக்கோங்க!
Oct 18, 2026, 09:40 IST
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது.
இன்று அக்டோபர் 18ம் தேதி சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை அக்டோபர் 19ம் தேதி தாம்பரம் - செங்கோட்டை மற்றும் சென்னை சென்ட்ரல் - கொல்லம் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அக்டோபர் 20: போத்தனூர், செங்கோட்டை, கொல்லம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்து சென்னை மற்றும் தாம்பரத்திற்கு மறுமார்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகப் பயணம் செய்யுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
