கண்ணீர் அஞ்சலியுடன் செஃப் தாமுவின் இறுதி ஊர்வலம்...மாதம்பட்டி ரங்கராஜ், வெங்கடேஷ் பட் பங்கேற்பு!
உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 25-ம் தேதி காலமான பிரபல சமையல் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செஃப் தாமுவின் இறுதி ஊர்வலம் சென்னையில் தொடங்கியது.

செஃப் தாமுவின் மறைவால் சமையல் கலைஞர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது இறுதி ஊர்வலத்தில், அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சமையல் கலைஞர்கள் மாதம்பட்டி ரங்கராஜ், வெங்கடேஷ் பட், நடிகர் கேபிஒய் பாலா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமையல் உலகில் நீங்கா இடம்
72 வயதான செஃப் தாமு, தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானார். குறிப்பாக, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று ரசிகர்களின் அன்பைப் பெற்றார். 2010-ம் ஆண்டு 617 உணவு வகைகளைத் தொடர்ந்து சமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்த அவர், சமையல் துறைக்கான பங்களிப்புக்காக 2025-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.
