‘ஷெஃப்’ தாமு மறைவு.. “சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பு” - முதல்வர் விஜய் இரங்கல்!
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர் 'ஷெஃப் தாமு' என்றழைக்கப்படும் கே. தாமோதரன் (72) மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

சமையல் கலைத் துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து, உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் வீடுகளிலும் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் 'ஷெஃப்' தாமு. அவரது மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், சமையல் கலைத்திறன் மூலம் மக்களிடம் நீங்கா இடம் பிடித்த அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ளார்.

"கடந்த 2010-ஆம் ஆண்டில் சமையல் துறையில் கின்னஸ் உலகச் சாதனை படைத்ததுடன், உயரிய பத்மஸ்ரீ விருதையும் பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர் ஷெஃப் தாமு. அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும்," எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
