அடுத்தடுத்து மயங்கி விழுந்த 8 பெண்கள்... பிரபல நிறுவனத்தில் ரசாயணம் லீக்காகி விபத்து!

 
உத்தரகாண்ட் மருந்து நிறுவனம்

உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூரில், மருந்து நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் பலர் திடீரென மயக்கமடைந்தனர். நேற்று மாலை, நிறுவனத்தில் துர்நாற்றம் பரவியதாகவும், அதன்பிறகு திடீரென பல பெண் ஊழியர்கள் ஒருவர் பின் ஒருவராக மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தொழிற்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

மயங்கிய நிலையில் இருந்த பெண் ஊழியர்களை நிறுவன நிர்வாகம் உடனடியாக காசிபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளது,  அனைவரது நிலையும்  மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவலின்படி, காசிபூரில் உள்ள மொரதாபாத் சாலையில் மருந்து தொழிற்சாலை உள்ளது. தொழிற்சாலையில் ஊழியர்கள் அனைவரும் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், திடீரென சில பெண்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பெண்களுக்கும் தலைசுற்ற ஆரம்பித்தது.

இதையடுத்து 8 பெண் ஊழியர்கள் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பெண் ஊழியர்கள் மயக்கமடைந்தவுடன், நிறுவனத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டது. தொழிற்சாலை மேலாளர் மற்றும் அவரது குழுவினர் உடனடியாக பெண்களை காசிபூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு பெண் ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழிற்சாலையில் ரசாயனம் லீக் ஆனதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும், பெண்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் தெரிவித்தார். இந்நிலையில் சில பெண் ஊழியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனைத்து பெண்களும் ஆரோக்கியமாக உள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web