நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை... சென்னையில் பரபரப்பு!

 
நர்சிங்

 

சென்னை செங்குன்றம் அருகே 18 வயது கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், அலமாதி எடப்பாளையத்தைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் ஆனந்தகுமாரின் மகள் ஜஸ்வினிஸ்ரீ (18). இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

ஆம்புலன்ஸ்

மாணவிக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், இது தொடர்பாகக் கல்லூரி ஆசிரியை அவரைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவி மனவேதனையில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் உள்ள தனது அறையில் மாணவி உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

மாணவியின் மரணத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரியில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.