மூழ்க சென்னை... விடிய விடிய களத்தில் பணியாற்றிய 15,000 ஊழியர்கள்.. 22 சுரங்கப்பாதைகளும் திறப்பு!

 
சென்னை மழை கமிஷ்னர்

சென்னையில் பெய்த அதிகனமழையைத் தொடர்ந்து, மாநகராட்சி மற்றும் அரசுத் தரப்பு மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகள் மூலம் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 6 இடங்களில் அதி கனமழையும் (20 செ.மீக்கு மேல்), 12 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. பாரிமுனையில் அதிகபட்சமாக 36.3 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது.

சுரங்கப்பாதை

விடிய விடிய நடைபெற்ற மீட்புப் பணிகளில் 15,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மழைநீரை வெளியேற்ற 650 மின் மோட்டார் மற்றும் டீசல் பம்புகள் பயன்படுத்தப்பட்டன. தேசிய பேரிடர் மீட்பப் படையின் ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்பப் படையின் (TNDRF) நான்கு குழுக்களும் பாதுகாப்புப் பணிகளில் களமிறக்கப்பட்டன.

மாநகரில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தேங்கிய நீர் முழுமையாக அகற்றப்பட்டு, காலை 6 மணிக்குள் அனைத்துச் சுரங்கப்பாதைகளும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டன.

சு

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக 9 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, அங்குள்ளோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

30 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தபோதிலும், அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் பெரிய விபத்துகளோ உயிரிழப்புகளோ தவிர்க்கப்பட்டு, தற்போது இயல்பு நிலை முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.