நாளை 2-வது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு... 85 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு!

 
வெற்றி

 

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, 2-வது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நாளை (நவ.25) சென்னையில் நடைபெறவுள்ளது.

தவெக அரசின் முதல் முதலீட்டாளர் மாநாடு; ரூ.67,452 கோடியில் 97 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெற்ற முதல் மாநாட்டில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள 2-வது மாநாட்டில் சுமார் 85 முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த மாநாடு மூலம் புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.