தீபாவளி பட்டாசு புகையால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு!

 
மாசு

 

தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தீபாவளி இரவில் காற்று மாசு அதிகரித்து பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நவம்பர் 9-ம் தேதி நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, ராயபுரத்தில் காற்றுத் தரக் குறியீடு 249 ஆகவும், மணலி வில்லேஜ் பகுதியில் 219 ஆகவும் பதிவாகியுள்ளது. மணலி பகுதியில் இரவு 9 மணிக்கு 164 ஆக இருந்த குறியீடு, நள்ளிரவில் 219 ஆக உயர்ந்தது. சென்னையின் சராசரி காற்றுத் தரக் குறியீடு தீபாவளி நாளில் 159 ஆகப் பதிவாகியிருந்தது.

 

பட்டாசுப் புகையால் காற்றில் நுண்துகள்களின் அளவு அதிகரிப்பது சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் வெளியில் செல்வதைக் குறைத்துக்கொள்வது நல்லது.