சென்னையில் ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுக்கு அபராதம்!

 
ஆட்டோ

 

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட ஆட்டோக்கள் மீது மாநகர போக்குவரத்து போலீசார் ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியது, பக்கவாட்டுக் கண்ணாடிகளை விதிமுறைக்கு மாறாகப் பொருத்தியது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட இருக்கைகளை மாற்றியமைத்தது உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டன. சீருடை அணியாத ஓட்டுநர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,500 வரை அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தல், உரிய ஆவணங்களின்றி வாகனம் இயக்குதல், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லுதல் ஆகிய விதிமீறல்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கே.கே. நகர், சோழிங்கநல்லூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடைபெற்றன.