போரூர் அருகே 14-வது மாடியில் இருந்து குதித்து 16 வயது மாணவர் உயிரிழப்பு!
Oct 15, 2026, 19:00 IST
சென்னை போரூர் அருகே அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து 16 வயது பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்கிருஷ்ணா (16) என்ற மாணவர், கோவூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று (அக். 14) அதிகாலை குடியிருப்பின் 14-வது மாபோரூர் அருகே 14-வது மாடியில் இருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மாணவருக்குக் காது கேட்பதில் குறைபாடு இருந்ததாகவும், படிப்பில் சிரமங்களைச் சந்தித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ விசாரணையில் உறுதி செய்யப்பட வேண்டும்.
