BMW காரை வாங்கிவிட்டு ₹5 லட்சத்துக்கு அடமானம்! 😲 ₹9 லட்சம் மோசடி.. சிக்கிய இளைஞர்

 
பிஎம்டபிள்யூ

 

சென்னையில் ரூ.10 லட்சத்துக்கு BMW காரை வாங்க ஒப்பந்தம் செய்த இளைஞர், மீதமுள்ள தொகையை செலுத்தாமல் அந்த காரை ரூ.5 லட்சத்துக்கு வேறு ஒருவரிடம் அடமானம் வைத்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை ஆலந்தூர் ஹாஜி தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா நஜிமுதீன் (42). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவரிடம் கடந்த 3 ஆண்டுகளாக ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவர் கார்களை வாங்கும் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார்.

BMW 5-Series LWB Price in Chennai, 5-Series LWB On Road Price in Chennai | CarTrade

இந்த நிலையில், ஹாஜா நஜிமுதீனின் BMW காரை ரூ.10 லட்சத்துக்கு வாங்க கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்காக முன்பணமாக ரூ.1 லட்சத்தை அவர் கொடுத்துள்ளார்.கடந்த ஜூன் 26-ம் தேதி கார்த்திகேயன் BMW காரை பெற்றுக்கொண்டார். மீதமுள்ள ரூ.9 லட்சத்தை பின்னர் கொடுப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், பலமுறை கேட்டும் அவர் பணத்தை செலுத்தவில்லை.இதனால் சந்தேகமடைந்த ஹாஜா நஜிமுதீன், செல்போன் செயலி மூலம் தனது BMW காரின் இருப்பிடத்தை கண்காணித்துள்ளார். பின்னர் ஆரணி பகுதிக்குச் சென்று விசாரித்தபோது, கார்த்திகேயன் அந்த காரை விக்னேஷ் என்பவரிடம் ரூ.5 லட்சத்துக்கு அடமானம் வைத்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹாஜா நஜிமுதீன் புனித தோமையர்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புகாரில் கூறப்பட்ட தகவல்கள் உறுதியானதைத் தொடர்ந்து கார்த்திகேயனை கைது செய்தனர்.மேலும், ஆரணி பகுதியில் இருந்து ஹாஜா நஜிமுதீனின் BMW காரை போலீசார் மீட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கார்த்திகேயன் மீது ஏற்கெனவே 4 மோசடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.