டிசம்பர் 27ம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சி தொடக்கம்!
சென்னையில் புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் டிசம்பர் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் டிசம்பர் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை துணை முதல்வர் வழங்க உள்ளார்.

இந்த புத்தக கண்காட்சியானது விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், பணிநாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடைபெறும். மொத்தம் 17 நாட்கள் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. எல்லா புத்தகங்களும் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
