சென்னை சி.எம்.டி.ஏ. எல்லை விரிவாக்கம் - சென்னை பெருநகரத்துடன் இணைகிறது அரக்கோணம்!
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லையை விரிவுபடுத்தும் தமிழக அரசின் நடவடிக்கையின் மூலம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தாலுகா சென்னை பெருநகரப் பகுதியுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்கு புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ள சென்னை பெருநகரப் பகுதி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுடன் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் தாலுகாவையும் சேர்த்து 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

சென்னை பெருநகருக்கான 2-வது முழுமைத் திட்டத்தின் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த 20 ஆண்டுகளுக்கான 3-வது முழுமைத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக பழைய பரப்பளவை மட்டும் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள அரக்கோணம் உள்ளிட்ட புதிய பகுதிகளையும் முழுமையாக உள்ளடக்கி ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மேலும் துரிதப்படுத்தப்படும்.
