சென்னையில் 853 இடங்களில் இலவச பொதுக்கழிப்பறைகள்! 7,644 இருக்கைகளுடன் மக்கள் பயன்பாட்டில்...

 
கழிப்பறை

 

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக 853 இடங்களில் 7,644 இருக்கைகளுடன் இலவச பொதுக்கழிப்பறைகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், மாநகரம் முழுவதும் பொதுக்கழிப்பறை வசதிகளை விரிவுபடுத்தும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதன்படி, மொத்தம் 1,479 இடங்களில் 10,444 இருக்கைகளுடன் பொதுக்கழிப்பறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 193 இடங்களில் 1,270 இருக்கைகளுடன் கழிப்பறைகள் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதேபோல், மேலும் 433 இடங்களில் 1,530 இருக்கைகளுடன் புதிய பொதுக்கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Comfort in sight: 433 more spots in Chennai to get free toilets

இந்தக் கழிப்பறைகள் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு சுகாதாரமான கழிப்பறை வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.