ஆயுதபூஜை நாளில் அதிர்ச்சி... தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை!
Updated: Oct 19, 2026, 10:05 IST
சென்னையில் தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்திலும் உயர்ந்துள்ளது. கடந்த வார இறுதியில் அதிகரித்த தங்கம் விலை, இன்று மேலும் உயர்ந்ததால் நகை வாங்குவோர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,08,560-க்கு விற்பனையாகிறது.
இதற்கிடையே, வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
