அதிரடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.640 சரிவு
Oct 20, 2026, 11:55 IST
சென்னையில் தங்கம் விலை இன்று (அக். 20) குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில், இன்று ரூ.640 சரிந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருப்போருக்கு விலை நிலவரம் கவனம் ஈர்த்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,07,920 ஆக உள்ளது.

இதற்கிடையே, வெள்ளி விலையில் தொடர்ந்து 5-வது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது
