சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்த தங்கம்… !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்குவோருக்கு கவனம் ஈர்த்துள்ளது. இன்று (நவம்பர் 12) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது.

நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,015-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.12,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.1,600 சரிந்து ரூ.1,02,520 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களில் ரூ.3,520 சரிவு
கடந்த மூன்று நாட்களில் மட்டும் சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை மொத்தம் ரூ.3,520 குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள் சந்தை விலையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.இதற்கிடையே, வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
