ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
Nov 27, 2026, 16:50 IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரனுக்கு மொத்தம் ரூ.1,840 அதிகரித்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இதன்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,770-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.94,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் இருமுறை விலை உயர்ந்ததால், திருமண சீசனில் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

அதேநேரம், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றித் தொடர்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.170-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
