தலைகீழாக சரிந்த தங்கம் விலை ... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
சென்னையில் தங்கம் விலை இன்று (நவம்பர் 11) அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,04,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளதால் நகை வாங்கத் திட்டமிடுவோர் கவனம் பெற்றுள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று (நவம்பர் 10) ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.1,05,680-க்கும், ஒரு கிராம் ரூ.13,210-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.1,04,120 ஆகவும், ஒரு கிராம் ரூ.13,015 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.195 குறைந்துள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் சரிந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.200-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. நகைக்கடைகளில் வாங்கும்போது அன்றைய விற்பனை விலையையும் செய்கூலி, சேதாரம் உள்ளிட்ட கூடுதல் கட்டணங்களையும் சரிபார்த்துக் கொள்வது அவசியம்
