4 நாட்கள் தொடர் அதிர்ச்சிக்கு ஒரு பிரேக்... நேற்றைய விலையில் நீடிக்கும் தங்கம்!

 
தங்கம்

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 6) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் இன்றைய விலை நிலவரத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்கம் தங்கத்தின்

சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.13,385க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,07,080 ஆக உள்ளது. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,240 உயர்ந்துள்ளது. இந்தத் தொடர் விலை ஏற்றத்துக்குப் பிறகு இன்று விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம்

அதேபோல், சென்னையில் வெள்ளி விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.210க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி வாங்கத் திட்டமிடுபவர்கள் நகைக்கடைகளில் அன்றைய இறுதி விலையை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது