“நாங்கள் என்ன திருடினோமா?” கைது நடவடிக்கையின்போது பெண் மருத்துவ பணியாளர்கள் ஆவேசம்!
Oct 13, 2026, 11:00 IST
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (அக்.12) பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கூறி, போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
“நாங்கள் என்ன திருடினோமா?” – பெண் பணியாளர்கள் கேள்வி
கைது செய்யப்பட்ட பணியாளர்களைப் பேருந்தில் ஏற்றிச் சென்றபோது, பெண் ஊழியர்கள் சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். “நாங்கள் என்ன திருடினோமா? எதற்காக போலீசார் எங்களை அடிக்கிறார்கள்? எது நடந்தாலும் கைதுதானா?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
