“என் மனைவியுடன் உனக்கு என்ன வேலை?” வீட்டுக்குள் தவெக பிரமுகரைப் பூட்டிய கணவர்!

 
சென்னை

 

சென்னை பள்ளிக்கரணையில், தனது மனைவியுடன் தவெக பிரமுகர் ஒருவர் வீட்டில் இருந்ததைக் கண்ட கணவர், இருவரையும் வீட்டுக்குள் வைத்து வெளிப்புறமாகப் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ்

பள்ளிக்கரணையைச் சேர்ந்த மகேந்திரன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்திரைசெல்வி, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மகேந்திரன் இன்று காலை வீட்டுக்குத் திரும்பியபோது, மனைவி சித்திரைசெல்வி, முகேஷ் என்ற தவெக பிரமுகருடன் வீட்டில் இருந்ததாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மகேந்திரன், வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டைத் திறந்ததும், சித்திரைசெல்வியும் முகேஷும் வெளியே வந்தனர். இந்தச் சம்பவத்தை மகேந்திரன் வீடியோவாகப் பதிவு செய்ததாகவும், பின்னர் முகேஷை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.