காசிமேட்டில் ரவுடி படுகொலை! மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸ் தீவிர விசாரணை

 
காசிமேடு

 

சென்னை காசிமேடு பகுதியில் பழைய மீன் ஏலக்கூடம் அருகே, தீபாத் என்ற நபர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று, உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட தீபாத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

கொலையில் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசிமேடு பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.