அதிகாலை சோகம்: ஃப்ரிட்ஜ் வெடித்து தீ விபத்து; மாற்றுத்திறனாளி பெண் பலி!

 
ஃப்ரிட்ஜ்

 

சென்னை கொரட்டூரில் வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவரும் மகனும் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஆம்புலன்ஸ்

கொரட்டூரில் உள்ள வீட்டில் இன்று (நவம்பர் 1) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்தது. அப்போது வீட்டில் அகிலா, அவரது கணவர் மற்றும் மகன் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென ஃப்ரிட்ஜ் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் தீ பரவியது.

தூக்கத்தில் இருந்த அகிலாவால் உடனடியாக வெளியேற முடியாததால், அவர் தீயில் சிக்கி உயிரிழந்தார். அவரது கணவரும் மகனும் தீக்காயங்களுடன் வீட்டிலிருந்து வெளியேறி உயிர் தப்பினர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அகிலாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஃப்ரிட்ஜ் வெடிப்பு மற்றும் தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும்.