தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
மழை மாணவி

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழை

வரும் செப்டம்பர் 3 முதல் 9-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

அதேவேளையில், உள் தமிழகப் பகுதிகளில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.