தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக, இன்றும், நாளையும் என அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கன மழை

இன்றும், நாளையும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை விடுமுறை

திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.