ஆயுத பூஜை, விஜயதசமி: சென்னையில் மெட்ரோ ரெயில் நேரம் மாற்றம்
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்! இன்றும், நாளையும் ஞாயிறு அட்டவணை
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, சென்னையில் இன்றும் (அக். 19), நாளையும் (அக். 20) மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பச்சை, நீல வழித்தடங்கள்
இந்த வழித்தடங்களில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரெயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயக்கப்படும். இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் சேவை இருக்கும்.

மஞ்சள் வழித்தடம்
மஞ்சள் வழித்தடத்தில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். விடுமுறை கால அட்டவணைக்கு ஏற்ப பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
