தேர்வே எழுத தேவையில்ல... சென்னை மெட்ரோவில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு!

 
மெட்ரோ

 

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப டெல்லி மெட்ரோ இன்டர்நேஷனல் நிறுவனம் (DMIL) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு ஒப்பந்த அடிப்படையில் நடைபெறுகிறது.

மெட்ரோ

அரசு அல்லது அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடர்புடைய பொறியியல் பிரிவில் 3 ஆண்டுகள் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 01.10.2026 நிலவரப்படி 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.31,193 (CTC) ஊதியம் வழங்கப்படும்.

 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதிகள்:

  • சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம்: நவம்பர் 10, 11, 12

  • கோவை: நவம்பர் 16

  • மதுரை: நவம்பர் 20, 21

கல்வித்தகுதி மற்றும் பிரிவுக்கு ஏற்ப தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே செல்லும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தங்களுக்கான தேதியைச் சரிபார்க்க வேண்டும்.

 மெட்ரோ

முக்கியம்: இது சென்னை மெட்ரோ நிறுவனத்தின் நேரடி நிரந்தரப் பணி அல்ல; DMIL மூலம் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான ஒப்பந்தப் பணி. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பிற தேர்வு நடைமுறைகளும் இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள், நகல்கள் மற்றும் பூர்த்தி செய்த பயோடேட்டா படிவத்துடன் காலை 8.30 மணிக்குள் செல்ல வேண்டும்