சென்னையில் தீவிரமடையும் கொசு ஒழிப்பு பணி! வீடு வீடாக புகை, வடிகால்களில் மருந்து தெளிப்பு

 
கொசு ஒழிப்பு

 

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில், கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி, வீடுகள் தோறும் கொசு ஒழிப்புப் புகை பரப்புதல், மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இந்தப் பணிகள் நடைபெற்றுள்ளன.

கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க தொடர்பு எண்: சென்னை மாநகராட்சி

கங்கை நகர், வேதகிரி குறுக்குத் தெரு, பாரதியார் தெரு, சாந்தி காலனி, திருவள்ளுவர் சாலை, ஆர்.கே. சாலை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொசு ஒழிப்புப் புகை பரப்பப்பட்டதுடன், மழைநீர் வடிகால்களிலும் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.மழைக்காலத்தில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி இந்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.