சென்னை பறக்கும் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி! 4 நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

 
மயிலாப்பூர்

 

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த விஜயா (55) என்பவர் காணாமல் போனதாக அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள பாழடைந்த அறையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த அறைக்குள் சென்ற விஜயா, அங்கிருந்த துவாரம் வழியாக கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விபத்து நடந்ததாகக் கூறப்படும் நான்கு நாட்களுக்குப் பிறகு, கீழ்தளத்தில் இருந்த அறையிலிருந்து விஜயாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.