சென்னை துறைமுகத்தில் ஒரே நாளில் 14,778 டன் இரும்பு கட்டிகள் ஏற்றுமதி!

 
சென்னை துறைமுகம் ஏற்றுமதி இறக்குமதி

சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் மூலம் ஒரே நாளில் 14,778 மெட்ரிக் டன் வார்ப்பு இரும்பு கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 'எம்.வி. சுப்ரா மோனார்க்' என்ற கப்பல் மூலம் ஒரே நாளில் 14,778 மெட்ரிக் டன் வார்ப்பு இரும்பு கட்டிகள் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு கடந்த ஜூலை 30-ஆம் தேதியன்று 13,208 டன் இரும்பு கட்டிகள் கையாளப்பட்டதே முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது அந்த மைல்கல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனையை எட்டியதற்காகத் துறைமுக அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்களுக்குச் சென்னை துறைமுகத் தலைவர் சச்சின் எஸ். குர்வே தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.