“உள்ளே ஏறி நில்லுங்க!” ... கண்டித்த நடத்துநர் மீது மாணவர்கள் தாக்குதல்... அரசுப் பேருந்தில் பரபரப்பு!

 
விழுப்புரம்

 

விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களை கண்டித்த நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, சில மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடியும், சாலையில் கால்களைத் தேய்த்தவாறும் ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை கவனித்த பேருந்து நடத்துநர், மாணவர்களை உள்ளே வந்து பாதுகாப்பாக நிற்குமாறு எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தங்களது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பேருந்து ப.வில்லியனூர் பேருந்து நிலையத்தை வந்தடைந்தபோது, மது போதையில் இருந்ததாக கூறப்படும் 2 இளைஞர்கள் பேருந்தில் ஏறி நடத்துநரை தாக்கியதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும், பேருந்தை சேதப்படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்ததும், அதைத் தட்டிக்கேட்ட நடத்துநர் தாக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் போலீஸ் விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.