புழல் தோல் தொழிற்சாலையில் பயங்கர தீ...வெடித்துச் சிதறிய ரசாயனப் பேரல்கள்!

 
தோல்

 

சென்னை புழலில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்கள் மற்றும் கட்டடம் சேதமடைந்தன.

Fire At Paint Factory In Puzhal, Workers Escape Unhurt | Chennai News - Times of India

தொழிற்சாலையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றியது. அங்கிருந்த பெயிண்ட் மற்றும் ரசாயனப் பேரல்களுக்கும் தீ பரவியதால், அவை அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதனால் தீ மேலும் பரவியது. பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Private warehouse at Puzhal gutted in fire accident - The Hindu

தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரசாயனப் பொருட்கள் எரிந்ததால் புழல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர்ந்த கரும்புகை பரவியது. இதனால் சிலருக்கு கண் எரிச்சல், தொண்டை வறட்சி, லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.