சென்னை - தென்காசி சிறப்பு ரெயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

 
 சிறப்பு ரயில்

 

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை எழும்பூர் - தென்காசி இடையிலான ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரெயிலில் கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ரயில் டிக்கெட்

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு இயக்கப்படும் ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06015), இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நாளை (சனிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு தென்காசியை சென்றடையும். இந்த ரெயில் ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது.

கூடுதலாக 2 பொதுப்பெட்டிகள்

இந்த ரெயிலில் ஏற்கனவே ஒரு ஏசி இரண்டடுக்கு பெட்டி, 3 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 10 படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.

ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பால

தற்போது பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை 2-ல் இருந்து 4-ஆக அதிகரிக்கிறது.இந்த கூடுதல் பெட்டிகள் இன்று முதல் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதனால் சென்னை - தென்காசி இடையே பயணம் செய்யும் பொதுப்பெட்டி பயணிகளுக்கு கூடுதல் இடவசதி கிடைக்கும்.