சென்னை டூ திருச்சி ரூ.14,673... விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையில் ஜெட் உயரத்துக்கு உயர்ந்த விமானக் கட்டணங்கள்!

 
துபாய் விமான நிலையம்

நாடு முழுவதும் வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 14) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், சனி, ஞாயிறு மற்றும் திங்கள் எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே தொடர் விடுமுறை என்பதால் ரயில் மற்றும் பேருந்துகளில் அனைத்துப் பயணச்சீட்டு முன்பதிவுகளும் முடிவடைந்துவிட்டன. இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வசதி படைத்த மற்றும் அவசரப் பயணம் மேற்கொள்வோர் விமானப் பயணங்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

விமானம் விமான நிலையம்

பயணிகளின் திடீர் தேவையைக் கருத்தில்கொண்டு, விமான நிறுவனங்கள் கட்டணங்களைச் பல மடங்கு உயர்த்தியுள்ளன.  சென்னை - தூத்துக்குடி: வழக்கமான கட்டணம் ரூ.6,991  தற்போது ரூ.17,153. சென்னை - மதுரை: வழக்கமான கட்டணம் ரூ.5,393 தற்போது ரூ.19,761

சென்னை - திருச்சி: வழக்கமான கட்டணம் ரூ.4,646  தற்போது ரூ.14,673

சென்னை - கோவை: வழக்கமான கட்டணம் ரூ.4,966 தற்போது ரூ.16,496

சென்னை - பெங்களூரு: வழக்கமான கட்டணம் ரூ.3,801 தற்போது ரூ.17,993

சென்னை - ஹைதராபாத்: வழக்கமான கட்டணம் ரூ.4,467 தற்போது ரூ.18,207

சென்னை - டெல்லி: வழக்கமான கட்டணம் ரூ.8,943 தற்போது ரூ.31,047

சென்னை - மும்பை: வழக்கமான கட்டணம் ரூ.6,516 தற்போது ரூ.24,592

சென்னை - கொல்கத்தா: வழக்கமான கட்டணம் ரூ.6,250  தற்போது ரூ.20,716

ஏர் இந்தியா விமானம்​​​​​​​

மக்களின் அவசரத்தையும் தொடர் விடுமுறை தேவையையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, விமான நிறுவனங்கள் வரன்முறையின்றி கட்டணங்களை உயர்த்தி வருவதாகவும், இதனால் நடுத்தர வர்க்க மற்றும் அவசரப் பயணம் மேற்கொள்வோர் கடும் பொருளாதாரச் சுமைக்கு ஆளாவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.