தடம் புரண்ட சென்னை ரயில்!! நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்!!

 
ரயில்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு டபுள் டக்கர் ரயில்(22625) பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையம் புறப்பட்டுச் சென்றது.இந்நிலையில், குப்பம் ரயில் நிலையத்தை கடந்து காலை 11.15 மணியளவில் பங்காருபேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இருந்து ரயிலின் பெட்டி புரண்டது.

ரயில்

இதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.  தெற்கு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பெங்களுரு ரயில் தடம்புரண்டுள்ள நிலையில், அவ்வழியாகச் செல்லும் ரயில்களின் சேவை  தற்காலிகமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரயில்

இதனால் ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

From around the web