சென்னை–திருச்சி இடையே இன்று, நாளை சிறப்பு மெமு ரெயில்! நேரம், நிறுத்தங்கள் விவரம்
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, சென்னை எழும்பூர்–திருச்சி இடையே முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரெயில்வே அறிவிப்பின்படி, இன்று (அக். 19) திருச்சியில் இருந்து புறப்படும் ரெயிலும், நாளை (அக். 20) சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரெயிலும் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படுகின்றன.

ரெயில் எண் 06195 இன்று இரவு 10.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, நாளை காலை 7 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், ரெயில் எண் 06196 நாளை காலை 11.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, இரவு 7.35 மணிக்கு திருச்சியை அடையும்.

இந்த ரெயில்கள் திருவெறும்பூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
