இருசக்கர வாகனம் மீது லாரி மோதி பெண் பலி!

 
சென்னை

 

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் குடிநீர் வடிகால் வாரிய லாரி மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற 50 வயது பெண் உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

மதுரவாயலைச் சேர்ந்த நிர்மலா, தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

விபத்தை ஏற்படுத்திய பின்னர் லாரியை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரைப் போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நிர்மலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.