தள்ளு, தள்ளு, தள்ளு....தொடங்கிய சில நாட்களிலேயே பழுதான ‘வெற்றி பயணம்’ பேருந்து... வைரல் வீடியோ!
சென்னையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வெற்றி பயணம்’ அரசு பேருந்து, இயக்கத் தொடங்கி சில நாட்களிலேயே நடுவழியில் பழுதாகி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென பழுதடைந்ததால், அதில் பயணம் செய்தவர்கள் மற்றும் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
பேருந்தை மீண்டும் இயக்குவதற்காக ஓட்டுநரும் நடத்துநரும் முயற்சி செய்தனர். இருப்பினும், பேருந்தை நகர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது.
அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் உடனடியாக உதவிக்கு வந்தனர். பேருந்தைத் தள்ளி நகர்த்தும் நிலை ஏற்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு பேருந்து சில நாட்களிலேயே பழுதடைந்த சம்பவம், அதன் பராமரிப்பு மற்றும் தரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
