விநாயகர் சிலைகள் 17 வழித்தடங்களில் ஊர்வலம் , சென்னையில் 4 இடங்களில் கரைப்பு!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக 4 கடற்கரை பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிலைகளை கொண்டு செல்ல 17 பிரத்யேக வழித்தடங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்படும் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அடையாறு, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிலைகள் நீலாங்கரை பல்கலை நகர் கடற்கரையிலும், வடசென்னை பகுதிகளான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் உள்ள சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடல் பகுதியிலும் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

