சென்னையில் விநாயகர் ஊர்வலத்தில் மோதல்! பஸ் டிரைவர் உயிரிழப்பு!

 
சென்னை

 

 

சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் தாக்கப்பட்ட MTC பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ராமாபுரம் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்

விநாயகர் ஊர்வலத்தில் என்ன நடந்தது?

ராமாபுரம் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றபோது மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது MTC பேருந்து ஓட்டுநர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

MTC டிரைவர் உயிரிழப்பு

தாக்குதலில் காயமடைந்த MTC ஓட்டுநர் உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்காக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து போலீஸ் விசாரணை தொடர்கிறது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

5 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராமாபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர். மோதல் ஏற்பட்டதற்கான காரணம், சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.