சென்னைவாசிகளே உஷார்... 10 நாட்களில் 2,000 பேருக்கு வைரஸ் காய்ச்சல்? வேகமாக பரவும் இன்ப்ளூயன்சா, ரைனோ வைரஸ், RSV!

 
காய்ச்சல்

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 நாட்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது இன்ப்ளூயன்சா ஏ (Influenza A), ரைனோ வைரஸ் (Rhinovirus), ஆர்எஸ்வி (RSV) உள்ளிட்ட பல்வேறு வைரஸ் தொற்றுகள் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் தீவிரமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: 2,000 பேர் பாதிப்பு

இந்த வைரஸ் தொற்றுகளால் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படக்கூடும். குறிப்பாக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், அதை அலட்சியப்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

மேலும், காய்ச்சலுக்கு தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்த்து, மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் பொதுமக்கள் சுய மருத்துவத்தை தவிர்த்து, மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது.