நெகிழ்ச்சி... 19 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்!

 
உடல் உறுப்பு தானம்

 

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 'தலைநீர் கோர்வை' எனப்படும் மூளை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 19 மாதக் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அந்தப் பிஞ்சு குழந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மூளைச்சாவு அடைந்தது.

உடல் உறுப்பு தானம்

பெற்ற பிள்ளையை இழந்த துயரத்திலும், பிற உயிர்களைக் காக்க முன்வந்த பெற்றோரின் இந்த நெகிழ்ச்சியான செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கண் கலங்கச் செய்துள்ளது. தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, மிகக் குறைந்த வயதில் உறுப்பு தானம் செய்த பெருமையை இந்த 19 மாதக் குழந்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.