மனைவி மீது ஆத்திரம்... போதையில் தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன் !
பெரவள்ளூர் வெற்றி நகர் நாகாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 68. இவரது மகன் நடராஜன் வயது 45 பெயின்டர் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி எழிலா மற்றும் ஜெயஸ்ரீ, ராகுல் ஆகிய இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

ராஜேந்திரன் இருபது நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில் வேளாங்கண்ணிக்குச் சென்றுவிட்டு நேற்று மதியம் வீடு திரும்பிய எழிலா, மதுபோதையில் இருந்த தனது கணவரிடம் தந்தை படுக்கையில் சிறுநீர் மற்றும் மலம் கழித்திருப்பது குறித்துக் கண்டித்துள்ளார்.

இதனைத் மனதில் வைத்துக் கொண்ட நடராஜன், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தை ராஜேந்திரனைச் சரமாரியாகக் குத்திப் படுகொலை செய்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்த நிலையில், தப்பியோட முயன்ற மகனைத் திருவிக நகர் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
