மோசமான வானிலையால் சென்னை - அந்தமான் விமானம் ரத்து; 176 பயணிகள் தவிப்பு - விமான நிலையத்தில் வாக்குவாதம்!

 
துபாய் விமான நிலையம்

மோசமான வானிலை காரணமாகச் சென்னையில் இருந்து அந்தமான் சென்ற விமானம் பாதியிலேயே மீண்டும் திரும்பியதால், விமான நிலையத்தில் பயணிகள் இரவு தங்குமிடம் மற்றும் உணவு கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆகாஷா விமானம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டுச் சென்ற ஆகாசா ஏர்லைன்ஸ் விமானம், அங்கு நிலவிய மோசமான மோசமான வானிலை காரணமாகத் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பப்பட்டு, ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விமானம் விமான நிலையம்

பயணிகள் அனைவரும் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், இரவில் திடீரென ஏற்பட்ட தற்காலிகத் தாமதத்தாலும், தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் கோரியும் பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.